பிரபல நடிகையிடம் தகாத செயல்! எல்லை மீறிய இளைஞர்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

இளம் நடிகைக்கு ட்விட்டரில் தொல்லை கொடுத்த நபர் கைது


கொல்கத்தா: இளம் நடிகைக்கு ட்விட்டரில் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்காலி படங்களில் நடிப்பவர் அருணிமா கோஷ். இவர் சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முகேஷ் மாயூக் என்ற பெயரில் ஒரு நபர் ட்விட்டரில் தனக்கு பலவிதங்களில் தொல்லை அளிப்பதாகக் கூறியிருந்தார்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குறிப்பிட்ட ட்விட்டர் ஐடி ஒரு ஃபேக் ஐடி என்பதை கண்டறிந்தனர். அத்துடன், இதனை பயன்படுத்தி வந்த நபரின் பெயர் முகேஷ் ஷா என்றும், அவர் சவுத் கொல்கத்தாவில் வசிப்பவர் என்றும் போலீசார் துப்பறிந்தனர். 

இதன்பேரில் அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நகை அருணிமா  கோஷ் பற்றி தரக்குறைவான வகையில் கமெண்ட் பகிர்ந்ததாகவும், பல வழிகளில் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அருணிமா கோஷ் கூறுகையில், ''அந்த நபர் செய்வது ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்தாலும், போகப் போகத்தான் அவர் என்னை கண்கொத்திப் பாம்பாக கவனித்து, நான் எது செய்தாலும் அதற்கு ஆபாச கமெண்ட் பகிர்வதை வாடிக்கையாகச் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். சில நேரங்களில் அவர் நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்தார். எனவேதான், போலீசில் புகார் அளித்தேன்,'' என்று கூறியுள்ளார்.