முடி உதிர்வை கட்டுப்படுத்தும் சிறப்பு தன்மை ஆளிவிதைக்கு உரியதாகும்!

ஆளிவிதையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.


ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் சிறப்பானது.

ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும்; முடி வளர்வதற்கு உதவும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும். இதய நோய், மூட்டு வலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆளி விதை சிறந்த ஒரு மூலிகை மருந்தாகும்.