அவன் என் கூடவே இருக்கனும்னு தான் கையில் டாட்டூ குத்திக்கிட்டேன்! உருகும் கனிகா!

மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ள கனிகா உணவகம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். என்னதான் பிஸியாக இருந்தாலும் தன் மகனுக்கு ஒரு பொறுப்புள்ள தாயாக இருப்பதாக தெரிவிக்கிறார் நடிகை கனிகா.


தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை கனிகா திருமணம் ஆன பின் அமெரிக்காவில் குடியேறினார். அவ்வப்போது மலையாள படங்களில் நடிப்பதற்கான இந்தியா வந்து சென்ற கனிகா பின்னர் சென்னையில் குடியேறிவிட்டார். சென்னை என்றாலே மகிழ்ச்சி எனக் கூறும் கனிகா தற்போது தமிழ் திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி என கூறுகிறார். 

நடிப்பு, தொழில், ஆரோக்கியம் என பல விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட ஒரு தாயாக இருப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறுகிறார் கனிகா. மகன் ரிஷியை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மற்ற விஷயங்களில் குறைவான கவனம் செலுத்துவதாக தெரிவிக்கிறார்.

மேலும் தனக்கு ஓவியம், நடனம், பாடுவதில் கூட அதிக ஆர்வம் உண்டு எனக் கூறும் கனிகா குழந்தையை முத்தமிடுவது போல் தான் வரைந்த ஓவியத்தை கையில் டாட்டூவாக பச்சை குத்திக் கொண்டதாக தெரிவித்தார். அதனால் நான் எங்கு செல்லும் போதும் என் மகன் என் கூட இருப்பதாகவே உணர்வதாக கூறுகிறார் நடிகை கனிகா.

மலையாளத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவரா இருக்கும் கனிகா மாஸ்டர் ஶ்ரீதர் மாஸ்டர் கேட்டுக் கொண்டதால் தன் பயனுடன் சேர்ந்து குத்து டான்ஸ் ஆடி மகிழ்வித்துள்ளார்.

மேலும் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துவதாக கூறும் கனிகா அதற்காக ஜிம்முக்குப் போக வேண்டியதில்லை. வீட்டில் இருந்து கொண்டே எளிமையான உடற் பயிற்சிகளைச் செய்யலாம்.

பாய்ஸ் படத்துல கதாநாயகி வாய்ப்பு வந்ததாகவும் அப்போது படித்துக் கொண்டிருந்ததால் நடிப்பதில் கவனம் செலுத்த வில்லை என கூறினார்.. `அந்நியன்' படத்துல சதாவுக்கு டப்பிங் கொடுக்கிற வாய்ப்பை இயக்குநர் ஷங்கர் தந்ததாக கூறும் கனிகா `சச்சின்' படத்துல ஜெனிலியாவுக்கு டப்பிங் கொடுத்ததாகவும் ஷங்கரின் `சிவாஜி' படத்துல ஸ்ரேயாவுக்கும் டப்பிங் கொடுத்ததாகவும் திருமணம் ஆகி அமெரிக்காவில் குடியேறி விட்டதால் டப்பிங் வாய்ப்புகளை தொடர முடியலை என தெரிவித்தார்.

சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்து. நடிப்பைத் தொடர்வதோடு, டப்பிங் பணிகளிலும் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கிறார் நடிகை கனிகா.