ஒரு கல்ப் பகார்டி ரம்! ஒரு சிப் நூடுல்ஸ்! சாப்பிட்ட உடன் மயங்கி விழுந்த இளம் பெண்! பிறகு நேர்ந்த விபரீதம்!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் மது அருந்தியபடியே நூடுல்ஸ் சாப்பிட்ட அழகுக் கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோதகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அத்வைத ஆஸ்ரம சாலையில் உள்ள பெண்களுக்கான அழகு மையத்தில் எஸ்தர் என்ற மிசோராம் மாநிலத்தை சேர்ந்த பெண் வேலை பார்த்து வந்தார்.  நேற்றிரவு பணி முடிந்த உடன் சக ஊழியர்களுடன் நூடுல்ஸ் சாப்பிட்ட எஸ்தர் பின்னர் பகார்டி ரக மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் போதையில் தூங்கி இருக்கலாம் என கருதி அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். பின்னர் காலையில் எஸ்தரை எழுப்பியபோது அவர் எழுந்திருக்காமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். எஸ்தர் பணிபுரியும் பியூட்டி பார்லரில் வெளிநாட்டு மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குடிபோதையில் எஸ்தர் இறந்தாரா? அல்லது நூடில்ஸ்-ல் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். எஸ்தரின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியான பின்னர் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மிசோராம் மாநிலத்தில் உள்ள எஸ்தரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் போதைக்கு அடிமையானால் சில இன்னல்களையும் சந்தித்துதான் ஆகவேண்டும்.