பாரதிய ஜனதா கட்சியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன்..?

தமிழிசையை தெலுங்கானாவுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு யார் தலைவர் என்று வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க.


ரஜினி, ஜக்கி வாசுதேவ் போன்ற இருவரும் கண்டுகொள்ளாமல் போகவே அடுத்த கட்ட்த்துக்குப் போயிருக்கிறார்கள். அதன்படி, இப்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனை கட்சியில் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவி கொடுக்க முடியாது என்பதால், அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக சொல்வது என்றால் குக்கிராமத்திலும் கிளைகள் இருக்கின்றன. அதனால், பெண்களை சென்றடைவதற்கு கட்சிக்கு எளிதாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார்களாம்.

இதுவரை, எந்த ஒரு கட்சி வட்டத்திலும் பங்காரு அடிகளார் சிக்கியது இல்லை என்றாலும், ஆன்மிக கட்சியான பா.ஜ.க.வில் சேர்வது தனக்கும் தங்கள் ஆதிபராசக்தி பீடத்துக்கும் நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

பங்காருக்கு நல்ல யோகம்தான்.