தொழில் போட்டி! 2 நடன அழகிகள் சேர்ந்து அரங்கேற்றிய கொடூர கொலை! கமல் சினிமா பாணியில் கண்டுபிடித்த போலீஸ்!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த 7ம் தேதி அன்று அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்து ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலையடுத்து காரிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.


உடல் முழுவதும்  அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிக்கல் ஏற்பட்டது.பின்னர் இறந்து போனது யார் என்ற விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அப்பெண் தன் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் தோடுகளை கைப்பற்றிய போலீசார் இவற்றை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோதிரத்தில் உள்ள அடையாளத்தை வைத்து அந்தக் கடையை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று இந்த நகையை வாங்கி நபர் யார் என விசாரித்தபோது அந்த விலாசம் மற்றும் போன் நம்பரை வைத்து விசாரித்தபோது பெங்களூரில் வசித்து வரும் ஸ்வேத்தா பிரியா என்பவர் தான் அந்த நகையை வாங்கி உள்ளார் என முடிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மோதிரத்தை தன் தாயிடம் கொடுத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து இறந்துபோனதை அப்பெண்ணின் தாயார் வசந்தாமேரி என்பதை போலீசார் உறுதிசெய்தனர். பின்னர் அவரது கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சோதனைச் சாவடியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திய போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் அதற்கு முன்னும் பின்னுமாக ஒரு நபர் பதிலளித்துள்ளார் அவரிடம் விசாரிக்கையில் அந்த வாகனம் பெங்களூரில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த கொலைக்கும் அவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரிக்க மனோகர் என்பவர் வசந்தா மேரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.அவரிடம் தீவிரமாக விசாரிக்கையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த லதா மற்றும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் அந்த நபருக்கு நெருக்கமான உறவு இருந்துள்ளது.

இந்நிலையில் லதா ஹோட்டல் ஒன்றில் நடன அழகியாக பணியாற்றி வருகிறார் அவரது தொழிலுக்கு அவரது தாயான வசந்தாமேரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் லதா சொல்வதைக் கேட்ட மனோகரன் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது நண்பர் சீனிவாசன் ஆகியோர் சந்தாமேரியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இதையடுத்து ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளனர் ,அதற்கு லதா ஸ்வேதா மற்றும் வசந்தாமேரி ஆகிய மூவரையும் அழைத்துள்ளனர் அப்போது லதாஅளவுக்கு அதிகமாக மது விருந்து வைத்துள்ளதாக தெரிகிறது.இதனால் போதையில் வசந்தாமேரி இருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் சடலத்தை மறைப்பதற்காக முட்புதரில் வீசி சென்றதாகவும் குற்றத்தை மனோகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கு காரணமாக இருந்தத லதா மற்றும் சுவேதா ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.