ரத்தப் புற்று நோய்க்கு மருந்து! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய டாக்டர்கள்!

ரத்த புற்றுநோயை குணப்படுத்துவது தொடர்பான ஆய்வில், பெங்களூருவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.


புற்றுநோய் இன்றைக்கு உலகை அச்சுறுத்தும் விசயமாக உள்ளது. இதில், ரத்த புற்றுநோயை எப்படி குணப்படுத்துவது என, ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு சயின்டிஃபிக் ரிசெர்ச்  நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, ஆய்வு செய்து, அதன் முடிவுகளை, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹீமாட்டலஜி பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க உதவும், அஸ்ரிஜ் என்ற ஸ்டெம் செல் புரதத்தை கண்டுபிடித்துள்ளதாக, அவர்கள் கூறியுள்ளனர். இது, ரத்த செல்கள் அதிகளவு முதிர்ச்சியடைவதை தடுப்பதாகவும், எலும்பு மஜ்ஜையில் இருந்து இதனை கண்டுபிடித்துள்ளதாகவும், ஆராய்ச்சிக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, ரத்த செல்களில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்யவும், இந்த புரதம் பயன்படுவதாக, அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இது புற்றுநோய் ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் என, இந்த ஆய்வை முன்னின்று நடத்திய மனிஷா எஸ் இனாம்தார் தெரிவித்துள்ளார்.