விபச்சாரம் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்..! மனைவிக்கு கணவன் கொடுத்த யோசனை! பிறகு அரங்கேறிய கொடூரம்!

டெல்லி: விபசாரத்தில் ஈடுபட மறுத்த 2வது மனைவியை கொன்று, பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.


 டெல்லியில் உள்ள வெஸ்ட் சாகர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜலில் ஷெய்க் (27 வயது). இவர், கடந்த 2014ம் ஆண்டு ஃபாத்திமா சர்தார் என்பவரை 2வது தாரமாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களாக, தனி வீடு எடுத்து தங்கி வந்தனர். அதேசமயம், ஜலிலின் முதலாவது மனைவி மேற்கு வங்கத்தில், அவரது சொந்த ஊரில் வசிக்கிறார்.  

இந்நிலையில், ஃபாத்திமாவை விபசாரத்தில் ஈடுபடும்படி, ஜலில் வலியுறுத்தி வந்திருக்கிறார். வருமானத்திற்காக  இதைச் செய்யும்படி ஜலில் கூறினாலும் அவர் தொடர்ந்து மறுக்கவே, இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜலில், ஃபாத்திமாவை கொன்றுவிட்டு, அவரை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து, சாகர்பூர் பகுதியில் உள்ள பாரத் கார் அருகே வீசிவிட்டு, தப்பியோடிவிட்டார்.

இதன்பேரில் வழக்குப் பதிந்த டெல்லி போலீசார், தீவிரமாக, தேடினர். இதன்போது, மேற்கு வங்கத்தில் ஜலில் தலைமறைவாக உள்ளதாக, போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த ஜலிலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.