டீச்சர்களுக்கு இனி டாடா! வகுப்பில் பாடம் எடுக்கும் பெண் ரோபோக்கள்! குதூகலிக்கும் இளசுகள்! எந்த ஸ்கூல் தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியருக்குப் பதிலாக ரோபோக்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.


பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான இண்டஸ் இண்டர்நேஷனல் என்ற பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அந்த பள்ளி நிர்வாகம் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது. முதலில் பள்ளிகளில் கரும்பலகை திட்டத்தை ஒழித்து டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த முயற்சியானது மிகவும் புதுமையாக உள்ளது என ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ரோபோக்களின் மூலம் கல்வி பற்றி வைக்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆசிரியர்களின் சிரமத்தை போக்கவும் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஒழுக்க கட்டுப்பாடுகளை கற்பிக்கவும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அந்த பள்ளி நிர்வாகம் ஈகிள் 2.0 என்ற வகை ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.

அந்த ரோபோக்கள் சைனாவிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் ஐஐடி மாணவர்கள் மற்றும் அனுபவமிக்க பொறியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழுவை கொண்டு ரோபோக்களுக்கு ப்ரோக்ராமிங் செய்து ரோபோக்களை பள்ளியில் பாடம் நடத்த வைத்துள்ளனர்.

அப்போது ரோபோக்கள் தங்களை உதவி ஆசிரியர் என அறிமுகம் செய்து கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்த தொடங்கியது. இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கழகத்தின் உறுப்பினர்கள் இந்த முயற்சியை வெகுவாக வரவேற்று வருகின்றனர்.