காண்டம் போட்டுட்டு வாடா..! கெஞ்சிய பாலியல் தொழிலாளி! முடியாது நீ காச திரும்ப கொடுடி..! கஷ்டமர் அரங்கேற்றிய கொடூரம்!

பெங்களூரு: ஆணுறை போடச் சொன்ன பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.


பெங்களூருவை அடுத்த புறநகர்ப்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரியும் முகுந்த என்ற நபர், செக்ஸ் தேவைக்காக, தனக்கு தெரிந்த பெண் ஒருவரை அணுகியுள்ளார். அந்த பெண் ரூ.2500 கேட்டுள்ளார். பிறகு, அவரிடம் பேரம் பேசி, ரூ.1500க்கு முகுந்த இறுதி செய்துள்ளார். இதற்காக, ரூ.500 அட்வான்ஸ் பணமும் கொடுத்துள்ளார்.

மேலும், அந்த பெண் கணவரை இழந்தவர் என்பதோடு, 11 வயது மகன் ஒருவரையும் பெற்றுள்ளார். அவரது மகன் பள்ளிக்குச் சென்ற பிறகு, தனது வீட்டிற்கு வரும்படி முகுந்தவிடம் கூறியிருக்கிறார். இதன்படி, சிறுவன் இல்லாத நேரம் பார்த்து முகுந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே எஞ்சிய தொகை ரூ.1000 கொடுத்த முகுந்த, அந்த பெண்ணுடன் செக்ஸ் செய்ய தொடங்கியுள்ளார். ஆனால், ஆணுறை அணிந்தபின்தான் ஆணுறுப்பை உள்ளே நுழைய அனுமதிப்பேன் என, அந்த பெண் கூறியிருக்கிறார். இதற்கு முகுந்த மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

ஆணுறை அணியாமல்தான் செக்ஸ் செய்வேன், இல்லை எனில் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு, என்று கூறி அந்த பெண்ணிடம் முகுந்த வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால், அவர் தர மறுத்துவிட்டாராம். இதையடுத்து, ஆத்திரமடைந்த முகுந்த ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அப்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, தப்பியோடினார். அத்துடன், அப்பெண் வைத்திருந்த செல்ஃபோன்கள், தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றுவிட்டார்.  

இதற்கிடையே, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், தனது தாய் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கூற, அவர்கள் வந்து சிசிடிவி கேமிரா காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பிறகு, வெளியூருக்கு தப்பிச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த முகுந்தவை, சுற்றி வளைத்து கைது செய்தனர்.