உயிருக்கு போராடிய தாய்! கெஞ்சிய காதலி! கண்டு கொள்ளாத காதலன்! பிறகு எடுத்த நெஞ்சை உருக வைக்கும் முடிவு!

பெங்களூரில் வசித்து வரும் ஒரு பெண் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்காக தனது திருமணத்தை நிறுத்தினார்.


வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயமானது. இதையடுத்து மகிழ்ச்சியோடு திருமண நாளை எதிர்பார்த்த அந்தப் பெண்ணுக்கு அப்போது தெரியாது தனது தாய் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட போகிறார் என்று.

அந்தப் பெண்ணுடைய தாயின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் முயற்சி செய்தும் மாற்று சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது சிறுநீரகத்தை தனது தாய்க்கு கொடுக்க முடிவு செய்த அந்த பெண் தான் திருமணம் செய்ய இருந்த இளைஞருடன் இது தொடர்பாக பேசினார்.

ஆனால் கடைசி வரை அந்த இளைஞர் திட்டவட்டமாக அதற்கு மறுத்த நிலையில் பெண்ணின் பிடிவாதமும் மன உறுதியும் மேலும் உறுதியானது. தனது தாய்க்கு சிறுநீரகத்தை கொடுக்க உறுதியாக முடிவு செய்த அந்தப் பெண் தனது திருமணத்தை நிறுத்தினார்.

தற்போது தனது சிறுநீரகத்தை அந்தப் பெண் தனது தாய்க்கு கொடுத்து அவரை காப்பாற்றிய நிலையில் அவருக்கு ஊராரின் பாராட்டு குவிந்து வருகிறது.