மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு வாழைப்பழம் சிறந்த மருந்துனு தெரியும்.. எப்போ சாப்பிடணும்னு தெரியுமா!

பழங்காலம் முதலே மலச்சிக்கலை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவாக வாழைப்பழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


தினமும் காலை மற்றும் மதிய வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை தடுக்கும்.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும். இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும். கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இக்காலத்தில் உடலில் சத்து தேவைகளை வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளை போக்கலாம்.