பாகுபலி பிரபாஸ் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ரசிகை! வைரல் வீடியோ!

பாகுபலி பிரபாஸ் கன்னத்தில் ரசிகை ஒருவர் விட்ட அறை தொடர்புடைய வீடியோ வைரல் ஆகி வருகிறது.


விமான நிலையம் ஒன்றில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பிரபாசை பார்த்ததும் அந்த நடிகை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். அதுமட்டும் அல்லாமல் அவர் அருகே சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

பிரபாசும் மகிழ்ச்சியுடன் அந்த ரசிகை அருகே நின்று போஸ் கொடுக்கிறார். ஆனால் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து முடித்த பிறகு தான் அந்த விபரீதம் அரங்கேறியது.

திடீரென அந்த ரசிகை பிரபாஸ் கன்னத்தில் ஒரு அறை விட்டார். பார்க்க வேகமாக அறை விட்டது போல் தெரிந்தாலும் கூட பாசத்தில் தான் அந்த ரசிகை அறைந்துள்ளார்.

திடீரென ரசிகை கன்னத்தில் அறைந்த காரணத்தினால் ஒரு நிமிடம் பிரபாஸ் அப்படியே சிலை போல் நின்றார். பின்னர் அன்பால் கொடுத்த அறை என்பதை உணர்ந்து புன்னகைத்தபடியே பிரபாஸ் அங்கிருந்து சென்றார்.

ரசிகை உணர்ச்சிவசப்பட்டு அறைந்த நிலையிலும் நடிகர் பிரபாஸ் அந்த இடத்தில் கண்ணியம் காத்துள்ளார். இதன் மூலம் பிரபாஸ் மீதான மதிப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...