த்ரிஷா மேட்டருக்கு ஒத்துக் கொள்ளவில்லை! பிரபல நடிகர் ஓபன் டால்க்!

எவ்வளவோ முயன்றும் நடிகை த்ரிஷா அதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை என்று பாகுபலி படத்தின் வில்லன் ராணா கூறியுள்ளார்.


   பாகுபலி படத்தின் பல்லால தேவனாக நடித்திருப்பவர் ராணா. படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் கூட அவரது உடற்கட்டுமற்றும் சண்டைக்காட்சிகளுக்காக ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் கூட அதன் பிறகு வெளியான காஸி அட்டாக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ராணா ஹீரோவாக நடித்து வருகிறார்.

   இதன் மூலம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும் ராணா வலம் வருகிறார். இந்தியிலும் ராணாவிற்கு தற்போது வாய்ப்புகள் குவிகின்றன. இவர் நடிகை த்ரிஷாவை காதலித்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. நடிகை த்ரிஷாவுக்கு சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் வருணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென திருமணம் ரத்தானது. இதற்கு ராணாவுடனான த்ரிஷாவின் நெருக்கமே காரணம் என்று சொல்லப்பட்டது.

   திருமணம் ரத்தான பிறகு நடிகை த்ரிஷா ராணாவுடன் வெளிப்படையாகவே பொது இடங்களில் தென்பட ஆரம்பித்தார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. த்ரிஷாவுக்கு ராணா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் கூட வெளியானது. ஆனால் திடீரென இந்த ஜோடி பிரிந்தது. இந்த நிலையில் இந்தியில் பிரபல இயக்குனர் கரன் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டார்.

   அப்போது அவரிடம் நடிகை த்ரிஷாவுடனான பழக்கம் பற்றி கேள்வி எழுப்பினார் இயக்குனர் கரண். அதற்கு த்ரிஷாவும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஏன் மிக நீண்ட நாட்கள் நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். ஆனால் அந்த நட்பு காதலாவதற்கான சில விஷயங்கள் எங்களுக்கு இடையே நடைபெறவில்லை. இவ்வாறு ராணா கூறியுள்ளார். ஏதோ ஒரு விஷயத்திற்கு த்ரிஷா சரிப்பட்டு வரவில்லை, அதனைத் தான் ராணா இப்படி வெளிப்படையாக கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.