இந்தியாவில் வசூலை வாரி குவித்த அவெஞ்சர்ஸ்! பாகுபலி சாதனை தப்பியதா?

avengers திரைப்படத்தின் முதல் நாள் வசூல் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் மிக அதிகமாக இருந்துள்ளது.


உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் என்ட்கேம் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இந்தத் திரைப்படம்தான் நேற்று திரையிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் முதல் நாளே சென்று பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் avengers திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சுமார் 2 ஆயிரம் திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது இந்தியத் திரை உலகில் வேறு எந்த திரைப்படமும் செய்யாத ஒரு சாதனை.

ஆனால் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் முதல் நாள் வசூல் சாதனையை avengers திரைப்படத்தால் முறியடிக்க முடியவில்லை. இதன் மூலம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் திரைப்படமாக பாகுபலி இரண்டாம்பாகம் நீடிக்கிறது.