குளுகுளு தென்னங்கீற்று ஆட்டோ! கொளுத்தும் வெளியிலில் திருச்சியில் ஒரு ஷிம்லா பயணம்!

திருச்சி மாநகரில் பல வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருபவர் சைமன் ராஜ். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் மிகவும் அதிகமாக உள்ளது.


இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சி வெளியில் வர தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது ஆட்டோவில் வெயிலின் தாக்கத்தை குறைக்க புதிய முயற்சியை எடுத்துள்ளார் சைமன் ராஜ். அது என்னவென்றால் தனது ஆட்டோவில் மேற்கூரையில் தென்னங்கீற்றால் பந்தல் போல் அமைத்துள்ளார் சவாரியின் போது தென்னங்கீற்றின் மேல் தண்ணீரை தெளித்து விடுவார்.

அதனால் ஆட்டோ முழுவதும் குளிர்ந்த நிலையில் இருக்கும். இதனால் அவருக்கு அதிக சவாரிகள் கிடைப்பதோடு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறார் ஆட்டோ டிரைவர் சைமன் ராஜ். இதனால் அவரது ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் மட்டுமல்லாமல் சக ஆட்டோ ஓட்டுநர்களும் கொஞ்ச நேரம் ஆட்டோவில் உட்கார்ந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். என சைமன் ராஜ் பெருமைப்படுகிறார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது நான் இருபது வருட காலங்களாக எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் நாட்கள் செல்ல செல்ல அந்த பணியை தொடர முடியாமல் போய் விட்டது எனவும் பின்னர் ஆட்டோ ஒன்று வாங்கி அதை ஒட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதற்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என தன் மனைவி குமுதாவிடம் கருத்து கேட்டுள்ளார்.

முதலில் தெர்மாகோலை பயன்படுத்தியுள்ளார் அதை சிறிது காலம் ஆனபிறகு நாற்றம் வீச துவங்கியுள்ளது இதனால் அதை கைவிட்டு விட்டார். அதற்கு மாறாக அவரது மனைவி தென்னங்கீற்றை ஆட்டோவின் மேற்கூரையில் போட்டால் குளிர்ச்சி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனை தான் அப்படியே செயல்படுத்தியுள்ளதாக ஆட்டோ டிரைவர் சைமன் கூறியுள்ளார்