அரசு வேலை பெறுவதற்காக போலி சான்றிதழ்களை அளித்த இளம்பெண் தற்போது ஒரு வருட சிறை தண்டனை பெற உள்ளார்.
வேலைக்காக கொடுத்த ரெஸ்யூமில் பொய் தகவல்! 1 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கும் இளம்பெண்! எங்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வெரோனிகா என்ற பெண் பட்டப்படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று வந்தார். அப்போது அரசு வேலை பெறுவதற்காக போலியான சில ஆவணங்களை தயாரித்து அதனை சமர்ப்பித்திருக்கிறார்.
குறிப்பாக, ஒரு லட்சத்து 85 ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெற்று வருவதாக சான்றிதழை தயாரித்திருக்கிறார். அதே போல் போலியான உடல்தகுதி சான்றுகளும், போலியான அனுபவ சான்றிதழும் தயாரித்து அதனை சமர்ப்பித்திருக்கிறார்.
இவர் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அரசு வேலைகளில் பணியமர்த்தப்பட்டு சந்தேகத்தின் பெயரில் அதே மாதத்திலேயே நீக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் வெரோனிகா மற்றும் இவரது சகோதரரும் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் கைதாகினர்.
விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் குறைந்த பட்சம் ஒரு வருட தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.