ஒரே நேரத்தில் வானில் எழுந்த 60 பறவைகள்! அடுத்த நொடியே மரணித்து கீழே விழுந்த திடுக் சம்பவம்! யார் செய்த அமானுஷ்யம்?

ஆஸ்திரேலியாவில் வானத்தில் பறந்து சென்ற 60 பறவைகள் அடுத்தடுத்து இறந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன


வானத்தில் ஒரே நேரத்தில் 60 பறவைகள் பறந்து செல்வது பார்ப்பதற்கு இனிமையான காட்சி தான். ஆனால் அவை திடீரென வரிசையாக இரத்தம் கக்கியபடி உயிர் இழந்து தரையில் விழுந்தால்... அப்படி ஒரு சம்பவம் தான் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று உள்ளது.

அமானுஷ்யம், மர்மம் உள்ளிட்ட திரைக்கதைகளை திரைப்படத்தில் பார்ப்பது பொழுதுபோக்கு தான். ஆனால் அதை நேரில் பார்ப்பவர்கள் கிலி அடையாமல் இருப்பதில்லை. அந்த வகையில் இந்த காட்சிகள் பார்த்தோரை திகிலடையச் செய்தன.

சில பறவைகள் பூமியில் வந்து விழுந்த பிறகு துடிதுடித்து இறந்ததை கண்டதாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். ஒவ்வொரு பறவையின் கண்களிலும் வாயிலும் ரத்தம் இருந்ததை காணமுடிந்ததாகவும் கூறினர்.

இறந்த பறவைகள் கோர்லாகல் என்னும் அரிய வகை இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை  கட்டிடங்கள் மின்கம்பங்கள் மத அமைப்புகள் விளையாட்டு கூடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இதனால் எவரேனும் இவற்றிற்கு விஷம் வைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இதுகுறித்து பறவை இயல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் எது எப்படி இருந்தாலும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்ற வகையில் அரிய இனப் பறவைகள் அழியாமல் காத்திருக்க வேண்டியது அவசியம்.