அகஸ்ட் 17 ம்தேதிவரை வசூல் மன்னனாக இருந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டு இருந்தார் அத்தி வரதர்.
அழுக்குத்தண்ணீரில் தூங்குகிறாராம் அத்திவரதர்! அதிரவைக்கும் மத்திய நீர்வளத்துறை அறிக்கை!
வந்து குவியும் பக்தர்களையும்,அவர்கள் அள்ளிக் கொடுக்கும் காசையும் பார்த்தவர்களும்,பசை சேர்த்தவர்களும்,அத்திவரதரை பர்மனெண்டாக வெளியிலேயே வைத்துக் கொண்டால் என்ன என்று ஆசைப் பட்டாலும்,அத்திவரதர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி,அத்திவரதரை அனந்தசரஸ் என்று அழைக்கப்படும் குளத்தில் வைத்து விட்டார்கள்.
இது தொடர்பாக அசோகன் என்பவர்,அத்திவரதர் வைக்கப்பட்டு இருக்கும் குளத்து நீர் சுத்தமானதுதானா என ஆய்வு செய்ய வேண்டும் எனக்கேட்டு பொதுநல வழ்க்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , அதை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு , மத்திய நீர்வளத்துறை இதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய நீர்வளத்துறை செயற்பொறியாளர் கிரிதரன் என்பவர் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை நேரில் பார்வையிட்டு,குளத்தின் நீர் மாதிதியை எடுத்து ஆய்வு செய்தார்.அதில் குளத்தின் அமிலத்தன்மை, மற்றும் வேதி உயிரியல் தன்மை ,மத்திய நீர்வளத்துறை நிர்ணயித்து இருக்கும் அளவை விட அதிகமாக மாசுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டது.
அதில் குளத்தில் காகிதக் கழிவுகள் , பிளாஸ்டி குப்பைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.வரதராஜபெருமாள் கோவில் வளாகத்திற்குள் பெய்யும் மழைநீர் மொத்தம் 15 வடிகால்கள் வழியாக குளத்தில் சேர்வதாகவும்.இந்த நீர் சுத்திகரிக்கப் படாமல் நேரிடையாக குளத்தில் சேர்வதால்த்தான் நீர் மாசுபடுவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
குளத்திற்குள் வைக்கப்பட்டு இருக்கும் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் பயோ ரிமடியேஷன் எனப்படும் , நுண்ணுயிர் சமநிலை ஏற்படுத்தும் முறையைக் கையாள வேண்டும்.அதற்கு குளத்துக்கு வரும் நீரை சுத்திகரித்த பிறகே குளத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கிரிதரன் தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
அறநிலையத்துறை ஏழு கோடிதான் வருமானம் என்று சொன்னாலும்,அத்திவரதர் பலருக்கும்,பலநூறு கோடிகள் சம்பாதிக்க வழிசெய்ததை அறிந்திருக்கும் காஞ்சி மக்கள்,இந்த அறிக்கைப்படி அனந்த சரஸ் குளம் தூய்மைப்படுத்தப் பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.