அத்திவரதருக்கு 40 வருட லீவு வருது! வீட்டிலேயே தரிசனம் செய்யுங்க பக்தாஸ்!

அத்தி வரதரைப் பார்க்க இத்தனை மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.


அதற்குள் நாட்கள் நெருங்கிவிட்டது. இன்னும் பத்துநாளில் மீண்டும் அத்திவரதர் ஒரு லாங் லீவு எடுக்கப் போகிறார். அதனால், அதற்குள் அவரை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்று டென்ஷன் ஆவாதீர்கள். ஏனென்றால், அலைமோதும் கூட்டத்தில் அத்திவரதரை மனதார தரிசிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதனால் வீட்டில் இருந்தே தரிசனம் பாருங்கள்.

ஏராளமான கூட்டம் காரணமாக உள்ளூர் போக்குவரத்து அனைத்தையும் முடக்கியது. ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தும் சுலபமான போக்கு வரவு இல்லை. மக்கள் நெடுந்தூரம் நடக்கவேண்டிஇருந்தது, வயதானவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மோட்டார் வாகனங்கள் நிறுத்த வசதிகள் இல்லை, வெளியூர் பக்தர்கள் வாகனங்களை ஊருக்கு வெளியே வெகு தூரங்களிள் நிறுத்தும்படி ஆயிற்று. குடிநீர், கழிவரை வசதிகள் போதவில்லை. வரிசையில் நீண்டநேரம் நிற்பவர்கள் கழிவறை வசதியில்லாமல் அவதி. அதனால் அங்கே போய் அவஸ்தைப்பட வேண்டாம்.

இன்னும் பத்து நாளில் இந்த பஞ்சாயத்து எல்லாம் முடிந்துவிடும் என்று காஞ்சிபுரம் மக்கள் சந்தோஷப்படும் நேரத்தில், இன்னமும் 48 நாட்கள் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று மீண்டும் வரதர் இயக்கத்தின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அப்படி, எதுவும் பண்ணிடாதீங்க என்பதுதான் காஞ்சிபுரம் மக்களின் விருப்பம். இதை அறிந்தோ என்னவோ, 16ம் தேதியும் அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது.