காதலர் தினத்தில் கூடுகிறது சட்டப்பேரவை - அன்றே பட்ஜெட் தாக்கல்!

14-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு


தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் இன்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் விதி 26(1)-ன் கீழ் அன்றைய தினம் அவையைக் கூட்டுவதற்கு பேரவைத்தலைவர் தனபால் முடிவுசெய்துள்ளார்.

விதி 181(1)-ன் கீழ், 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய ஆளுநர் நாள் குறித்துள்ளார். இதன்படி வரும் 14ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும் என்று பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியாகவும் இத்தகவல் முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.