வன்னியர்களை வம்பு இழுத்து வீடியோ! டிக் டாக் இளைஞர் சென்னையில் கைது!

சாதிக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் டிக் - டாக்கில் பேசிய இளைஞரை கைது செய்துள்ள அசோக் நகர் போலீசார் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.


நாடாளுமன்ற தேர்தல் அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரு சமூகத்தினரிடையே கலவரம் வெடித்தது. ஒரு சமூகத்தினர் மீதும், குடியிருப்புகளின் மீதும் மற்றொரு தரப்பினர் நடத்திய தாக்குதல் மேலும் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொன்பரப்பி விவகாரம் தொடர்பாக டிக் - டாக்கில் சர்ச்சைக்குரிய வகையில் 3 இளைஞர்கள் பேசிய வீடியோ வைரலானது.

3 இளைஞர்களும் தாங்கள் சென்னை அசோக் நகர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்களென வீடியோவில் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக அசோக் நகர் போலீசார் இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விஜயக்குமார் என்ற இளைஞரை கைது செய்து மேலும் தலைமறைவாகவுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

விரைவில் அவர்கள் இருவரையும் கைது செய்ய உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதே போல் வீடியோ வெளியிட்டால் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.