மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து கண்ணீர் மல்க வேண்டுதல் வைத்துள்ளார்.
அமித்ஷாவை சந்தித்த அற்புதம்மாள்! திருமாவின் முயற்சியால் ஏழு பேர் விடுதலை சாத்தியப்படுமா?

இந்த சந்திப்புக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரவிகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வென்றெடுத்து, ஏழு பேர் விடுதலைக்கான மசோதா இன்னமும் தமிழக கவர்னர் அறையில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால், காங்கிரஸ் என்றால் பா.ஜ.க. என்றாலும் இந்த விவகாரத்தில் ஏழு பேருக்கு விடுதலை கொடுக்கத் தயாராக இல்லை என்பதே உண்மை.
இலங்கை தமிழர்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதும், ராஜீவ்காந்தியுடன் மரணம் தழுவியவர்கள் கொடுத்திருக்கும் மனுவும் ஏழு பேர் விடுதலைக்குத் தடையாக இருந்துவருகிறது. இந்த சூழலில் கடைசி நம்பிக்கையாக இன்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார் அற்புதம்மாள்.
இன்று மத்திய அரசில் தனித்துவமாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா மட்டுமே. ஏழு பேரை விடுதலை செய்தால் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் மரியாதை கூடும் என்பதை உணர்ந்து, அப்படியொரு நடவடிக்கை எடுத்தால் நல்லது. அற்புத்தம்மாளுடன் சேர்ந்து நாமும் ஏழு பேர் விடுதலைக்காக காத்திருப்போம்.