ஆர்மீனியா நாட்டில் கண்ணிலிருந்து கற்கள் வருவது போன்ற வினோத நோய் ஒன்று பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.
அழுதால் கண்ணீருக்கு பதில் கண்களில் வெளியேறும் கிரிஸ்டல் கற்கள்! இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீத நோய்!
ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர் சாட்டனிக் கஷாயர். 22 வயதான இவருக்கு வினோத நோய் ஒன்று ஏற்பட்டது. அதன்படி அவருக்கு அடிக்கடி கண் வலி ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் உறவினர்களிடம் அவர் தெரிவிக்க கண்ணை பரிசோதித்த போது கண்ணில் கண்ணாடி போன்று இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே மருந்து ஊற்றி கண்ணிலுள்ள கிரிஸ்டல் கற்களை அகற்றி விட்டு அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பினர். வீட்டிற்கு வந்த பின்பு மறுபடியும் கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல இம்முறை 20 கற்களுக்கும் மேல் கண்ணில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பின் மீண்டும் கண்கள் உறுத்த கண்ணை பரிசோதித்த போது கண்ணீர் கற்களாக மாறி வருவதையும் நாளொன்றுக்கு 50 இற்கும் மேற்பட்ட கற்கள் உருவாகி அதன் வழியாக வெளியேறுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் வலியால் துடித்த அவர் வேறு மருத்துவமனைக்கு சென்று பார்த்தும் நோய் என்னவென்று கண்டறிய முடியவில்லை என்பதால் வெளிநாடுகளுக்கும் சென்று மருத்துவம் பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் ரஷ்ய கண் மருத்துவர் ஒருவர் அந்நாட்டிற்கு சென்ற பொழுது அவரது கண்ணை பரிசோதித்து இது புரதச்சத்து மற்றும் உப்பு உடலில் அதிகமானதன் காரணமாக கண்ணீரில் கற்கள் வருவதாகவும், கிட்னி கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அதனை கண்டறிந்து சரி செய்தால் பிரச்சினை குணமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது வினோத நோய் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.