ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? இதோ ஓர் இனிப்பான செய்தி மற்றும் ஒரு கசப்பான செய்தி!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களா நீங்கள். அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த புத்தாண்டு செய்தி உங்களுக்குத் தான்..


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி சேவை அளிக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில். புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து வங்கிகள் கடந்த ஏப்ரலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஒரே பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள், வேறு கிளைகளுடன் இணைக்கப்பட்டும். சில கிளைகள் புதிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இதனால், சென்னை, ஹைதரபாத், மும்பை உட்பட பல நகரங்களில் செயல்பட்டு வந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 23 ஆயிரம் கிளைகளின் பெயர்கள் மற்றும் அதற்கான ‘ஐஎப்எஸ்சி’ எனப்படும் வங்கி கிளைக்கான அடையாள குறியீடும் ஏற்கனவே மாற்றப்பட்டு செயல்பட்டது.

இந்நிலையில், ஏடிஎம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்.ஏற்கனவே உபயோகத்தில் உள்ள மேக்னடிக் ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1 தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும். EVM சிப்புகள் மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது ஸ்டேட் வங்கி.

மேலும் ஜனவரி 1 முதல், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் எண்ணை (OTP) பயன்படுத்தி தான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மிற்கு மட்டுமே பொருந்தும் என்றும். மற்ற வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இந்த நடைமுறை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப் படுவதாகவும். அதன்படி 8.05 சதவிகிதமாக உள்ள வட்டி விகிதங்களை 7.80 சதவிகிதமாக குறைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இந்த புதிய வட்டி குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மணியன் கலியமூர்த்தி.