கிமியா டேட்ஸ் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! அப்போ இத படிங்க முதல்ல!

பிரபல நிறுவனம் பெயரில் போலி பேரிச்சம் பழ விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது


பிரபல முன்னணி பேரிச்சம் பழ  நிறுவனமான கிமியா டேட்ஸ் இந்திய அளவில் புகழ்   பெற்றது. இந்தியாவின்   பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தரம் குறைந்த போலியான பேரிச்சம் பழங்கள்  விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளர்கள் அளித்த  தகவலின் பேரில் ஆந்திர மாநிலம் ஹைத்திராபாத் பேகம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிமியா டேட்ஸ்  நிறுவனத்தின் பெயரில் பேரீச்சம் பழ பாக்கெட்டுகளை இந்திரா ஏஜன்சீஸ் உரிமையாளர்கள் நிதிஷ் டாண்டன் மற்றும் நிதின் டாண்டன் ஆகிய இருவரும் தங்கள் குடோனில்  விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் ரூ30 லட்சம் மதிப்புள்ள  பேரிச்சம்பழ பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் நிதின் டான்டன், நிதிஸ்  டான்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குடோனும் சீல் வைக்கப்பட்டது