கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? பணம் கட்டலைன்னா ஆப்பு வருது உஷார்!

கிரெடிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்து. அதற்காக தேதியில் பணம் கட்ட தவறும் பட்சத்தில்.


 குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர்கள் மீது 2007 சட்டம் பிரிவு 138 இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமாக "எஸ்பிஐ கார்டு". மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் களம் இறங்க ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் எஸ்பிஐ துணை நிறுவனத்தின் சமீபத்திய நிதியாண்டு அறிக்கையின் படி. கிரெடிட் கார்டு உபயோகித்து சரியாக தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி. எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் சுமார் 25.52 கோடி அளவுக்கு பரிவர்த்தனை செய்து. குறிப்பிட்ட தேதியில் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்கள் 19,201 மீது பேச்சுவார்த்தைக்குட்பட்ட சட்டப் பிரிவு 138 இன் கீழ் வழக்குகளும். 

சுமார் 72.6 கோடி ரூபாய் ஏய்ப்பு செய்ததாக கூறி. செட்டில்மென்ட் ஆப்ஷன் மூலம் 14,174 வாடிக்கையாளர்கள் மீது கடன் தொகையை செலுத்த தவறியதாக. கொடுப்பன மற்றும் தீர்வு சட்டம் 2007 இன் பிரிவு 25 இன் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது எஸ்பிஐ.

மேலும். குறிப்பிட்ட இந்த இரண்டு சட்டப்பிரிவுகளின் படி. இதுவரை சுமார் 64 ஆயிரத்து 510 கோடி ரூபாய் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இந்த வங்கி.

பங்குச்சந்தையில் களமிறங்க தயாராக உள்ள இந்த நிலையில். இதுபோன்ற எதிர்மறையான இழப்பீடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக. இனிவரும் காலங்களில் எஸ்பிஐ கடன் அட்டைகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் வாடிக்கையாளர்கள். ஏதாவது ஒரு காலகட்டத்தில் சரியான தேதியில் பணம் கட்டத் தவறினால், உடனடியாக அந்த கடன் அட்டையின் உபயோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தாமதமாக பணம் கட்டும் பட்சத்தில். சிபில். கிரிஸில் போன்ற கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களின் தளத்தில் நெகட்டிவ் கஸ்டமர் என பதிவேற்றம் செய்யப்படும் என்றும். எதிர்காலத்தில் குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர் வங்கி சார்ந்த கடன்கள் பெறும்போது இதன்மூலம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி.

கடந்த 2018-19 ஆண்டு மட்டும் கிரெடிட் கார்டுகள் மூலமாக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று.

இந்தியாவில் அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கி 1.2 கோடி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களையும். எஸ்பிஐ வங்கி 87 லட்சம் வாடிக்கையாளர்களையும் முறையே அடுத்தடுத்த இடங்களில் ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி இடம் பெறுகிறது.

டெல்லி அகமதாபாத் மும்பை புனே போன்ற நகரங்களில் அதிகப்படியான கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளும். கொல்கத்தா பெங்களூரு சென்னை ஹைதராபாத் போன்ற நகரங்களில் குறைந்த அளவிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும், இந்தியாவில் கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு உபயோகிக்கும் வாடிக்கையாளர்களில் நான்கில் ஒருவர் இதுபோன்ற கிரெடிட் கார்டு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கிறது சமீபத்திய அறிக்கை ஒன்று.

இந்நிலையில் கிரெடிட் கார்டில் பயன்படுத்திய தொகையை சரியாக செலுத்த வாடிக்கையாளர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பாய உள்ளதாக எஸ்பிஐ வங்கி கூறியுள்ளதை அடுத்து. கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணியன் கலியமூர்த்தி