அரசமரத்தை சுற்றினால் நிஜமாகவே குழந்தை பிறக்குமா?

மரங்கள் ஒவ்வொன்றும் மனித குலத்திற்கு இயற்கை தந்த வரங்கள். அந்த வரிசையில் அரசமரம் பெண்ணின் கருக்குழாய் வரை சென்று அற்புதம் செய்யக்கூடிய அதிசயமரம். அறிவியல்பூர்வமான உண்மைகளுடன் இதோ அரசமரத்தின் தன்மைகள்.


மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது அரசமரம். மற்ற அனைத்து மரங்களைவிடவும் அரச மரத்தில் இருந்து உயிர்வளி என்று சொல்லப்படும் ஆக்சிஜன் அதிக அளவில் வெளிப்படுகிறது. இதுதவிர அமோனியா வாயுவும் வெளிவருகிறது.



ஆக்சிஜன் எங்கேயும் இருக்கிறதே அதை எதற்கு அரசமரம் சுற்றி பெற வேண்டும் என்று கேட்டால் அதற்கும் காரணம் இருக்கிறது. நமது உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் அக்சிஜனை போதிய அளவுக்கு உள்ளே இழுத்து சுவாசிக்காத பெண்களுக்கு கருக்குழாயில் கழிவுகள் சேர்ந்து அடைப்புகள் உண்டாகிறது. அதனால் இந்தப் பெண்கள் அரச மரத்தை தினமும் 21 சுற்று, 51 சுற்று, 108 சுற்று என்று கணக்கு வைத்து 108 நாட்கள் சுற்றவேண்டும் என்று சொன்னார்கள். அப்படி செய்யும்போது அதிகபட்ச ஆக்சிஜனையும் அமோனியாவையும் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் உடலின் தேவையில்லாத கழிவுகள் எல்லாம் எரிந்து வெளியேறிவிடுகின்றன. இதுமட்டுமின்றி கொழுப்பு,  தேவையற்ற சதை வளர்ச்சி, கட்டிகளும் கரைந்துவிடும்.



அதிகாலையில் குளித்துமுடித்து அரசமரத்தை சுற்றுவதுதான் மிகவும் நல்லது. உடற்பயிற்சி போன்று உடலுக்கு உரமும், ஆரோக்கிய மூச்சும் கிடைப்பதால் குழந்தைப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதாலே அரச மரத்தை சுற்றுகிறார்கள்.