கமலின் பிக்பாஸ் வீட்டில் காங்கிரசின் திருநங்கை பிரபலம்! உண்மை என்ன தெரியுமா?

மீண்டும் கமல்ஹாசனுக்கு மறு வாழ்வு தருவதற்கு பிக்பாஸ் சீசன் 3 வேகவேகமாக தயாராகிவருகிறது. இந்த நிலையில் யாரெல்லாம் உள்ளே தங்கப் போகிறார்கள் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டன. அதில், இந்த முறை முதன்முறையாக ஒரு திருநங்கையும் உள்ளே அழைத்துச்செல்லப் படுகிறார் என்று சொல்லப்பட்டது.


ஆம், அதற்காக காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்த அப்சரா ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை உள்ளே இருக்க வேண்டும் என்று பேசப்பட்டுள்ளது. அவர், யோசித்துவந்த நிலையில், உடன் பங்குபெறுபவர்களால் பல்வேறு பிரச்னை எழுப்பப்பட்டதாம்.

அதாவது, அவருக்கு என்று தனி அறை செட் செய்யப்பட வேண்டும், தனி பாத்ரூம் வசதி செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டதாம். ஆண்களுடன் அல்லது பெண்களுடன் தங்குவதை அனுமதிக்க முடியாது என்று சொல்லப்பட்டதால், அந்தத் திட்டம் தற்போது டிராப் செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நுழைந்து பதவியைத்தான் வாங்க முடியவில்லை என்றால், அப்சரா ரெட்டியால் பிக் பாஸ் வீட்டிலும் நுழைய முடியவில்லை என்பது வேதனைதான்.