எந்த நேரத்திலும் கமல் கைது! மதக் கலவரத்தை தூண்டியதாக வழக்கு!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள அரவக்குறிச்சி போலீஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல் இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் நாதுராம் கோட்சே என்றும் கூறியிருந்தார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதற்காக இப்படி பேசவில்லை என்றும் கமல் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் கோட்சே எனும் கொலைகாரனை இந்து என்றும் அவன் ஒரு தீவிரவாதி என்றும் கோரி இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக கமல் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து கமல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் விதிகளை மீறி இரண்டு மதங்களுக்கு இடையே விரோதத்தை தூண்டும் வகையில் கமல் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கமல் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295a மற்றும் 153a ஆகிய இரண்டு பிரிவுகளில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சட்டப் பிரிவு 295a என்பது குறிப்பிட்ட ஒரு மதத்தை அவதூறாகவும் அந்த மதத்தினர் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் பேசுபவர்களுக்கு எதிராக பதிவு செய்வதாகவும். இதேபோல் இந்திய தண்டனைச் சட்டம் 153a என்பது இரண்டு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி மதக் கலவரத்தை உருவாக்க அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படுவதாகவும்.

அவ்வளவு எளிதில் முன் ஜாமீனில் வெளிவர முடியாத இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் கமலை கைது செய்யவும் அரவக்குறிச்சி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் கமல் முன்ஜாமீன் கோரி நாளை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு என்றும் சொல்லப்படுகிறது.