கூசாமல் பொய் பேசும் அன்வர் ராஜா..! இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போறாரோ?

உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மகனும் மகளும் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தெரிந்துதான் தேர்தலில் நிறுத்தினேன் என்று அருள் வாக்கு கூறியிருக்கிறார் அன்வர் ராஜா.


அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதபியா, திமுக சார்பில் சுப்புலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இரு முனை போட்டியில், பதிவான வாக்குகளில் சுப்புலட்சுமி 2,405 வாக்குகளும, ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும் கிடைத்தன.

அதே போல் இவரது மகன் நாசர் அலி, திமுக வேட்பாளர் தவ்பீக் அலியிடம் 983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்கள்.

இந்தத் தோல்விக்குக் காரணம் இஸ்லாமியர்கள்தானாம். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமிய சமுதாய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்கின்ற உணர்வு ஒவ்வொரு இஸ்லாமிய வாக்காளரிடமும் இருக்கிறது. அவர்கள் அ.தி.மு.க. மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.

அது தெரிந்துதான் என்னுடைய பிள்ளைகளை நிறுத்தியிருந்தேன் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் போர்க் களத்திற்குச் செல்லும் வீரனைப் போல எங்களுடைய குடும்பத்திலிருந்து இரண்டு பேரை களமிறக்கினேன். தோற்றாலும் பரவாயில்லை அதை மகிழ்ச்சியோடு நாம் ஏற்றுக்கொள்வோம் என்று நான் எடுத்த முடிவின் காரணமாக இந்த தோல்வி எனக்கு ஏற்பட்டது என்று சொல்லியிருக்கிறார்.

வெற்றிகரமான தோல்வியைப் போன்று இப்போது தெரிந்தே தோல்வி. இன்னும் என்னவெல்லாம் பேசப் போகிறார்களோ?