ஈரோடு மாவட்டம் , அந்தியூர் அடுத்த நல்லிகவுண்ட புரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் - நிஜானந்த காசி விஸ்வநாதன் என தனது பெயரை மாற்றி வைத்து கொண்ட இந்த சாமியார். 10 அடி ஆழத்தில் பாதாள சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருகிறார்.
10 அடி அகலம்..! 10 அடி ஆழம்..! பாதாள அறை! நள்ளிரவு பூஜை! சாமியாரால் பரபரக்கும் அந்தியூர்!
ஈரோடு மாவட்டத்தில் விஸ்வநாதன் என்ற சாமியார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டு பின்னர் ஆன்மீகத்தின் மீதான ஈர்ப்பினால் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார். அந்த ஊரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்மீகம் குறித்தும், யோகா உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்றுள்ள விஸ்வநாதன் கனவில் மகான் ஒருவர் தோன்றி, சிவ பெருமானுக்கு பாதாளத்தில் லிங்கத்தை பிரதிஸ்டை செய்ய வலியுறுத்தி உள்ளார். இதனை அடுத்து, தனது சொந்த ஊர்க்கு திரும்பிய விஸ்வநாதன் இந்த விவகாரம் குறித்து அந்த மக்களுக்கு சொல்ல, அவர்கள் இவர் நாடகமாடுகிறார் என மறுத்துள்ளனர்.
இதற்கிடையில், அவரை பார்க்க பல்வேறு மாநிலத்தின் மக்கள் கூட்டம் சேர சாமியார், குழியை தோண்டி 48 நாட்கள் மவுன விரதம் இருக்க உள்ளதாக அறிவிக்க, கடந்த 17 ஆம் தேதியில் இருந்து சாமியார் பூஜை செய்து வர, அந்த காட்சிகள் சமூக வலை தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் இது வரை 3 நாட்கள் ஆன நிலையில் இன்னமும் 45 நாட்கள் இந்த பூஜை தொடரவுள்ளது.