தனது கணவரை காதல் வலையில் வீழ்த்தி ருபாய் 83 லட்சம் மோசடி செய்து. தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஆங்கிலோ இந்திய பெண் போலீசில் புகார்..!!
கணவனின் கள்ளக்காதலியால் மிரட்டப்படும் இளம் மனைவி! பதற வைக்கும் காரணம்!

சென்னை: சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் தனது கணவரை காதல் வலையில் வீழ்த்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.83 லட்சம் வரை தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றி, அவரை ஏமாற்றி மோசடி செய்த இளம்பெண் தன்னை மிரட்டுவதாகவும் அவரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்து பெரம்பூர் பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண் மார்லின் டாக்கெட் (50) என்பவர், தன் கணவரை ஏமாற்றி தன்னையும் மிரட்டும் அந்த இளம்பெண் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரிடெரிக் கிளைவ் பேட்ரிக் டாக்கெட் அவருடன் சென்னைக்குக் குடியேறி பல வருடங்கள் ஆன நிலையில் அவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
எங்கள் வீட்டின் கீழ் தளத்தில் ஆல்வினா நகோத்தி (28) என்ற பெண் நல்ல முறையில் நட்பாக பழகி வந்தார். பின்னர் தன் கணவரும் அந்த இளம் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் அவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது இந்நிலையில் கடந்த கடந்த 17.7.2018ம் தேதி எனது கணவர் சவுதி அரேபியாவிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் கடந்த 5.9.2018ம் ஆண்டு எனக்கு போன் செய்த ஆல்வினா நகோத்தி உங்கள் கணவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வெளிநாடு சென்ற கணவர் எப்படி சென்னையில் இருக்கிறார் என்று அச்சத்தில் இருந்தேன். அவசரமாக நான் கணவரை பார்க்க சென்றபோது, மீண்டும் போன் செய்து எனது கணவர் இறந்துவிட்டதாக கூறினார்.அந்த சமயத்தில் எனது கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.83 லட்சம் பணத்தை ஏமாற்றி அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி வீடு, சொகுசு கார்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
என் கணவர் இறப்பில் மர்மம் உள்ளது என்றும் இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி நீதிமன்றம் உத்தரவுப்படி எனது கணவரின் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆல்வினா நகோத்தி தன்னிடமிருந்து பணம் கேட்க கூடாது என்றும் தினமும் என்னை மிரட்டி வருகிறார். எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார் .எனவே இதுகுறித்து நான் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்றும் அவரது மனைவி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.