எங்க அம்மா இறந்துட்டாங்க! இறுதிச்சடங்குக்கு கூட போகல.! கண் கலங்க வைத்த போலீஸ்காரரின் கடமை உணர்ச்சி!

ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த காவல் ஒருவர் கொரோனா பாதுகாப்பு பணியால் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லமால் செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் மருத்துவர்கள், காவல்ர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களின் உயிர்களை பனையவைத்து இரவும், பகலுமாக மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  

இந்த சூழ்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம் பணிப்புரிகின்றார். இந்நிலையில், இவர் கடந்த சனிக்கிழமை அன்று விஜயவடா ரயில்வே ஸ்டேசன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பை கேட்டதும் அதிர்ந்து போன ஷாண்டராம் கண் கலங்கினார். காரணம் 69 வயது கொண்ட அவரது தாய் சீதாமகாலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அவருக்கு அரசாங்கத்திடம் இருந்து உடனே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மறுத்தார் ஷாண்டராம் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என்றும் தெரிவித்தார். 

இதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ஷாண்டராம் அவரிடம் ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என விசாரித்துள்ளார். அதற்கு அவர் அளித்த பதிலை கேட்டதும் கண் கலங்கினார் இன்ஸ்பெக்டர். காவலர் தெரிவித்தது என்னவென்றால் ‘தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டுமென்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். மேலும், அங்கு சென்றால் அதிக மக்களுடன் பேச வேண்டி வரும்.

இதன் காரணமாக பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் காவலர் தனது தம்பியிடம் தாயின் இறுதி சடங்கை செய்யுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, தனது தாயின் இறுதிச்சடங்கை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் முகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து பேசிய இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ அவர்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் காவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள். தயவு செய்து மக்கள் தங்களின் நிலைமையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் என்றும் மக்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார்.