டயர் நக்கியை டயருக்குப் பின்னே ஓடிவர வைச்சுட்டாரு எடப்பாடி..! அ.தி.மு.க. கமெண்டால் அதிர்ந்த அன்புமணி ராமதாஸ்

தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் டயர் நக்கிகள் என்று கேவலமாக கிண்டல் செய்தவர் அன்புமணி.


ஆனால், உறுதிமொழி பத்திரம் என்று பெயருக்கு ஒரு பேப்பரை எழுதிக்கொடுத்துவிட்டு கூட்டணியில் சேர்ந்து அத்தனை எம்பி.க்களையும் தோற்றுவிட்டாலும், அன்புமணியை ராஜ்ய்சபா எம்.பி.யாக்கிவிட்டனர்.

இந்த நேரத்தில் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான எக்ஸ் எம்.எல்.ஏ. கோ.சமரசம் கலந்துகொண்டு பா.ம.க.வை நாறடித்துவிட்டார். 

எடப்பாடியார் இப்போது ராஜதந்திரியாகவும் தலைசிறந்த தலைவராகவும் உருமாறி வருகிறார் என்று சொல்லிவந்தார். அப்போதுதான் பா.ம.க. பற்றி பேச்சு எழுந்தது. எந்தக் கூட்டணிக் கட்சிக்கு எடப்பாடி அடி பணிவதில்லை. டயர் நக்கி என்று சொன்னவரையே, தன்னுடைய டயருக்குப் பின்னே ஓடிவர வைச்சுட்டாரு எடப்பாடி என்று கூறி பா.ம.க.வை அதிர வைத்திருக்கிறார்.

தகவல் அறிந்து டென்ஷன் ஆகியிருக்கும் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் இந்த உண்மையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்களாம்.