கொரனா நோயை கட்டுப்படுத்த நாடெங்கும் சுயஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் வேட்டியை மடித்துக் கட்டி டீ போட்ட புகைப்படம் வைரல் ஆகி உள்ளது.
வேட்டியை மடித்துக் கட்டி கிட்சனில் களம் இறங்கிய அன்புமணி ராமதாஸ்..! மனைவி, பிள்ளைகளுக்கு டீ போட்டு கொடுத்து அசத்தல்!

கொரனாவில் இருந்து தப்பிக்க மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வீட்டிற்கு பணியாட்கள் கூட வேலைக்கு செல்லவில்லை போலும். டீ கூட யாரும் போட்டுத் தராத நிலையில் தானே களத்தில் இறங்கினார் அன்புமணி ராமதாஸ்.
நேராக சமையலறைக்கு சென்ற அவர் அடுப்பை பற்ற வைத்து பால் பாக்கெட்டை பிரித்து டீ போடுகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய தலைவர் அவர் கடைசியில் அவருக்கு டீ போட்டு கொடுக்கக்கூட ஆள் இல்லாமல் செய்துவிட்டதே கொரனா என்று நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர்.
கொரனாவை பொறுத்தவரை அதற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். மார்ச் 22ம் தேதியன்று அன்புமணி ராமதாஸ் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ‘ அதில், இந்தியா முழுவதும் இன்று ஊரடங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேறு வழியில்லை.
எனவே இந்த ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.