காடுவெட்டி குரு நினைவாக மணிமண்டபம் இன்று பா.ம.க. சார்பில் திறந்துவைக்கப்பட்டது.
வன்னியர்கள் முன்னேறாமல் தமிழகம் முன்னேறாது! காடுவெட்டி குரு விழாவில் சின்ன அய்யா பரபரப்பு!

காடுவெட்டி குரு மருத்துவச் செலவுகளை ராமதாஸ் கவனிக்கவில்லை என்று அவரது மகனும், குருவின் அம்மாவும் கடும் கோபத்தில் இருந்தனர். தேர்தல் சமயத்தில் அவர்களை எப்படியோ சமாளித்து தங்கள் பக்கம் இழுத்துவந்தது ராமதாஸ் டீம்.
இந்த நிலையில் இன்று மணிமண்டபம் திறப்பு விழாவில் அன்புமணி அவரது தொண்டர்களிடம் உருக்கமாக ஒரு வேண்டுகோள் வைத்தார். ஆம், குருவின் ஆசைக்காக பா.ம.க.வை ஒரே ஒரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும அவர், ‘‘நம் மக்களின் எண்ணிக்கை நமக்கு பலம், நம்மிடையே ஒற்றுமையின்மை நமது பலவீனம். தமிழகத்தை யார் யாரோ ஆண்டார்கள்.
நான் கேட்பது, தமிழகத்தை நாங்களும் ஆள வேண்டும் என்பதைத்தான். பிற சமுதாய தலைவர்கள், தான் சார்ந்த சமுதாயத்திலுள்ள மற்ற தலைவர்களை பற்றி ஒருபோதும் விமர்சிப்பதில்லை. ஆனால், நாம் சார்ந்த சமூகத்தினர் மரு.அய்யாவை பற்றி சிலர் சுயநலத்திற்காக விமர்சிக்கின்றர். வன்னியர்கள் முன்னேறாமல், தமிழகம் முன்னேற முடியாது.
அய்யாவை எதிர்த்து, பாமகவை எதிர்த்து யார், யாரெல்லாம் பதிவு எழுதுகிறார்களோ? அவர்கள் இந்த சமுதாயத்தின் துரோகிகள். தமிழகத்திலுள்ள அத்துனை வன்னியர்களும், மரு.ராமதாஸ் தலைமையின் பின்னால் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பூம்புகாரில் 'வன்னியர் சங்க மகளிர் மாநாடு' விரைவில் நடத்த உள்ளதாக- பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அதேபோன்று வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என்றும் அதற்காக சுவர் விளம்பரம், பேனர்கள் போன்றவற்றை வைக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
அன்புமணிக்கு நாளும் தமிழகத்தில் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இணையத்தில் என்னைப்பற்றி பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடுபவர்கள் பொறம்போக்கு, ஈனப்பிறவிகள் என்றெல்லாம் திட்டினார் ராமதாஸ்.
நாம பொறம்போக்கா இல்லைன்னா ஈனப்பிறவியான்னு தெரியலையே... தெளிவா சொல்லுங்கய்யா!