அம்மாவின் அரசு எடப்பாடி அரசா மாறிப்போச்சுங்க! எங்கும் நான்! எதிலும் நான்!

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது வெளியிடப்படும் அனைத்து அறிக்கையிலும் நான் உத்தரவிட்டுள்ளேன், நான் அறிவித்துள்ளேன், நான் ஆணையிட்டுள்ளேன் என்றுதான் அறிக்கை வெளியிடப்படும்.


அதன்பிறகு பன்னீர்செல்வமாக இருக்கட்டும், அதன்பிறகு வந்த எடப்பாடியாக இருக்கட்டும், அம்மாவின் அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்றுதான் அறிவிப்பு வெளியானது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பதாக இருந்தாலும், ஏதேனும் திட்டம் அறிவிப்பதாக இருந்தாலும், அம்மாவின் அரசு அறிவிப்பு செய்துள்ளது அல்லது அம்மாவின் ஆசியுடன் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது என்று வெளியானது.

ஆனால், கடந்த தேர்தலுக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது. ஆம், இப்போது வெளியிடப்படும் அரசு அறிவிப்பு எல்லாமே நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடியின் பெயருடன் வெளிவருகிறது. மானியம் வழங்குவது தொடங்கி, தண்ணீர் திறப்பது வரை நான் உத்தரவிட்டுள்ளேன் என்கிறார்.

அமைச்சர் மணிகண்டன் நீக்கத்திற்குப் பிறகும் கட்சியில் எந்த சிக்கலும் இல்லை என்பதை அறிந்துகொண்டதாலே, முதல்வர் இப்படியொரு முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். பவ்யமாக பேசிய பழனிசாமியா இது..?