ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் மாற்றம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 41


அம்மா உணவகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதால், தினமும் ஏதேனும் ஓர் அம்மா உணவகத்திற்குச் சென்று ஆய்வு செய்வது சைதை துரைசாமிக்கு வாடிக்கையாகவே மாறிவிட்டது. வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில் அல்லது கோட்டைக்குச் செல்லும் நேரத்தில் அதிகாரிகள் யாரையும் அழைக்காமல் தான் மட்டுமே சில அம்மா உணவகத்திற்குச் சென்று செயல்பாடுகளை பார்வையிடுவார்.

அதிகாரிகளையும் அழைத்துச்சென்றால், உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று கேட்டனர். அதற்கு சைதை துரைசாமி, ‘குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லப்போகிறோம் என்று தெரிந்துவிட்டால், அந்த உணவகத்தை மட்டும் உடனடியாக சரிசெய்து சிறப்பாக வைத்துக்கொள்வார்கள். எந்த உணவகத்திலும் ஆய்வு நடக்கலாம் என்ற எச்சரிக்கையுணர்வு ஊழியர்களிடம் இருந்தால் மட்டுமே எல்லா உணவகமும் செம்மையாக நடைபெறும். அதேநேரம், நான் ஒரு பார்வையாளராகச் செல்கிறேனே தவிர, மேயராகச் செல்வதில்லை…’’ என்று விளக்கம் கொடுத்தார்.

அப்படி ஒரு நாள் சைதை துரைசாமி திடீர் விசிட் சென்ற நேரத்தில் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு முடித்த தி.நகரை சேர்ந்த பார்த்திபன் என்ற ஆட்டோ டிரைவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சந்தித்துப் பேசினார்.

‘’காலையில் பள்ளி மாணவர்கள் சவாரி நிறைய கிடைக்கும் என்பதால் சீக்கிரம் கிளம்பிவிடுவேன். அந்த நேரத்திற்குள் காலை உணவு சாப்பிட முடியாது என்பதால் சாப்பிடாமலே கிளம்பிவிடுவேன். மதிய நேரம் வீட்டிற்குச் சென்று சாப்பிட ஆசைப்பட்டாலும், சவாரிக்காக எந்த இடத்தில் இருப்போம் என்றே தெரியாது. அதனால் இரவு சாப்பாடு மட்டும்தான் வீட்டில் நிம்மதியாக சாப்பிடுவேன்.

தொடர்ந்து காலையும், மதியமும் கண்ட கண்ட ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்ததால் மாதத்தில் நாலைந்து நாட்கள் நான் வயிற்று வலியில் அவதிப்படுவேன். ஹோட்டலில் சாப்பிட வேண்டாம் என்று டாக்டர் சொன்னாலும், அதை பின்பற்ற முடியாமல் அவதிப்பட்டேன். அம்மா உணவகம் தொடஙகப்பட்டதும், என்னுடைய வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது. இதனால் எனக்கு எத்தனை ரூபாய் மிச்சம் தெரியுமா?’’ என்று கேள்வியும் கேட்டார்.

- நாளை பார்க்கலாம்.