சிவசேனாவை வதம் செய்யப்போகிறாரா அமித் ஷா? சரத்பவாரும் சோனியோவும் செம ஜாலி!

ஆளும் பா.ஜ.க. அரசின் கண்ணில் விரல்விட்டு ஆட்டி வருகிறது சிவசேனா. தேசியவாத காங்கிரஸ் கைவிட்டதால், தங்களிடம் சரண்டர் ஆவார்கள் என்று சிவசேனாவை நினைத்துக் காத்திருந்தது பா.ஜ.க. ஆனால், மீண்டும் சரத்பவாரிடமே தஞ்சம் அடைந்தது.


சரத்பவார் வைத்த கோரிக்கையை ஏற்று, சிவசேனாவுக்கு இருந்த ஒரே எம்.பி.யும் மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவந்த்தி பதவி விலகச் செய்துவிட்டது.

இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா நிலவரம் குறித்து ஆலோசிக்க அவசரமாக கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்.

சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்பு. சரத்பவாரின் கோரிக்கையை ஏற்று, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரியவந்துள்ளது.

தேசியவாத காங்கிரசின் நிபந்தனை ஏற்கப்பட்டுவிட்டதால், பா.ஜ.க. அல்லாத ஆட்சி மகாராஷ்டிராவில் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த விஷயத்தை பா.ஜ.க.வால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இதுவரை எத்தனையோ கட்சிகளை சிம்பிளாக டீல் செய்த அமித் ஷாவால், சிவசேனாவை எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனால், எந்த வகையில் அவர்களை சிக்க வைப்பது என்று சீரியஸாக நோட்டமிட்டு வருகிறாராம். ஆட்சியில் அமர்ந்தாலும் சிவசேனாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க இருக்கிறாராம் அமித் ஷா.

பார்க்கத்தானே போறோம்.