ரஜினியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டில்லா மகிழ்ச்சி! சென்னையில் அமித் ஷா வச்ச ட்விஸ்ட்!

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய லிசனிங், லேர்னிங் & லீடிங் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேச்சு :


இளம் வயதிலிருந்து பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் வெங்கய்யா நாயுடு. வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன். தமிழில் பேச முடியாமைக்கு என்னுடைய மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். பல்வேறு பணி காரணங்களால் தமிழ் கற்க முடியவில்லை. ஆனால் சென்னையில் நிச்சயமாக நான் தமிழில் பேசுவேன்.

இங்கு உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பிலோ, பாஜக தலைவர என்ற பொருப்போலோ நான் வரவில்லை. வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெங்கையா நாயுடு வாழ்ந்து வருகிறார், அவரின் மாணவராக வந்துள்ளேன்.

இந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு என்பது, வெங்கையா தன் வாழ்நாளில் ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளார் என்பதின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது இந்த தலைப்பு. அவர் தன் வாழ்க்கையை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் இருந்துள்ளார்.

மோடி அரசு அண்மையில் அரசியல் சட்டபிரிவு 370 ரத்து செய்துள்ளது. எனவே வெங்கையா நாயுடு இளைஞராக இருக்கும் போதே இதற்காக குரல் கொடுத்தவர். நான் சட்டமன்ற உறுப்பினராக  இருக்கும் போதே இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

மேலும் 370 சட்டத்தால் இந்தியாவுக்கு மட்டுமின்றி காஷ்மீருக்கும் எந்த பயனும் இல்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன். அதன் காரணமாகவே வெங்கையா தலைமையில் இந்த நடவடிக்கையை மாநிலங்களவையில் மற்றும் மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

வெங்கையா அகில இந்திய தலைவரான பிறகு காலையில் முதலில் அலுவலகத்திற்கு வருபவர். கட்சி நிர்வாகிகள் உடன் உரை நடத்துவதில், கட்சியை இந்த அளவிற்கு வளர்ச்சிக்கு கொண்டு சென்றதில் அவரின் பங்கு மிகவும் பெரியது.

விவசாய குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால், விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவரது அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு வருபவர் அவர்.

ஒரு கட்சியின் கொள்கையின் சார்பில் உறுதிப்பாட்டுடன் உள்ளவர். மேலும் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் அவர் கடினமாக இருப்பதாக எனக்கு புகார்கள் வருகிறது. எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருபவர் அவர்.

இந்த புத்தகம் அவருடைய 2 ஆண்டு காலம் துணை குடியரசு தலைவராக இருந்த அனுபவத்தை பற்றியது என்றாலும், அவர் இன்னும் நிறைய பெருமைகளை பெற உள்ளார். இந்த புத்தகம் அனைவருக்கும் ஒரு அனுபவமாக இருக்கும், அனைவரும் இதனை படிக்க வேண்டும்.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு விழாவில் அமித் ஷா பேசினார்.