எடப்பாடி ஆட்சிக்கு கெடு வைத்திருக்கும் அமித் ஷா..! இன்னும் 15 நாட்களில் முடிவு ரெடி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் வெல்வதை மானப்பிரச்னையாக மட்டுமின்றி, தன்னுடைய எதிர்கால அரசியலே இந்த வெற்றியில்தான் இருக்கிறது என்று எடப்பாடி நம்புகிறார்.


நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் வெல்வதை மானப்பிரச்னையாக மட்டுமின்றி, தன்னுடைய எதிர்கால அரசியலே இந்த வெற்றியில்தான் இருக்கிறது என்று எடப்பாடி நம்புகிறார். 

அதனால்தான் அவரது நம்பிக்கைக்குரிய தங்கமணியை நாங்குநேரி தொகுதிக்கு பொறுப்பாளராக போட்டுள்ளார். விக்கிரவாண்டிக்கு வேறு வழியே இல்லாமல் சி.வி.சண்முகத்தை நியமனம் செய்திருக்கிறார்.

பணம் ஒரு பிரச்னையே இல்லை, எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் ஒரே வேண்டுகோள். ஏன் என்று விசாரித்தால், இதற்குப் பின்னே இருக்கும் எதிர்கால அரசியல் தெரியவருகிறது.

அதாவது அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துதான் தமிழகத்தில் தேர்தலை சந்திக்கவேண்டிய நிலைமையில் பா.ஜக. இருக்கிறது. அதனால் அ.தி.மு.க.வின் ஊழல் விவகாரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இப்படி இருந்தாலும் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் அமித்ஷாவுக்கு வந்துள்ளது.

அதனால் இந்த சட்டமன்றத் இடைத் தேர்தலில் வெல்லும் அளவுக்கு கட்சியை எடப்பாடி சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தொடர்ந்து கூட்டு வைத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு வேளை தோற்றுவிட்டால் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க.வினர் மீது இருக்கும் ஊழல் புகாரை தூசி தட்டி, தமிழகத்தில் நல்ல பெயர் வாங்கலாம் என்ற முடிவுக்கு அமித்ஷா வந்திருக்கிறாராம்.

அ.திமு.க.வுடன் கூட்டு சேரவில்லை என்றாலும் ஊழல் நடவடிக்கை எடுத்தால் மக்களிடம் மதிப்பு கிடைக்கும் என்பதுடன் பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை நிச்சயம் கூடவே வருவார்கள் என்று நம்புகிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும் இந்த இமேஜ் தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதனால்தான் எடப்பாடி இரண்டு தொகுதிகளிலும் மிகவும் சீரியஸாக பணியாற்றி வருகிறாராம். இன்னும் 15 நாட்களில் எடப்பாடியின் தலையெழுத்து புரிந்துவிடும் என்கிறார்கள்.