சாகச காரில் விபரீத பயணம்! நொடிப் பொழுதில் பறிபோன ஐடி என்ஜினியர் உயிர்! பதற வைக்கும் வீடியோ!

ஐதராபாத்: அமெரிக்காவில் இருந்து விடுமுறையில் வந்த சாஃப்ட்வேர் என்ஜீனியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரவிந்த் குமார் பீச்சாரா (45 வயது) என்பவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக, டல்லாஸ் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறைக்காக தனது நண்பர்களுடன் சமீபத்தில் ஐதராபாத் வந்திருக்கிறார். அங்குள்ள  கொடமகுடா அட்வெஞ்சர் ரிசார்ட்டில் தங்கிய இவர், அங்குள்ள மலைகளில் சாகசம் செய்வதற்காக, 4 வீல்கள் கொண்ட பைக்குகளில் ஏறி சாகச பயணம் சென்றுள்ளளார்.

அப்போது, ஓரிடத்தில் பைக் ஏற முடியாத அளவுக்கு  மேடாக இருந்துள்ளது. ஆனாலும், விடாப்பிடியாக அதில் பைக்கை அவர் ஓட்ட, திடீரென அது கவிழ்ந்துவிட்டது. 

சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் அறிவித்தனர். முறையான பயிற்சி இன்றி அரவிந்த் குமார் பைக் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.