செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரம்..! விஞ்ஞானி வெளியிட்ட புகைப்படம்! உலகம் முழுவதும் பரபரப்பு!

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன என்று, அமெரிக்க விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எமிரிடியஸ் வில்லியம் ரோமோசர். விஞ்ஞான ஆராய்ச்சியாளரான இவர், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறார். இதன்படி, சமீபத்தில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் ஒன்றில் சிறிய பூச்சி போன்ற உயிரினம் தென்படுவதாக, அவர் குறிப்பிடுகிறார்.  

அந்த பூச்சி போன்ற உயிரினம், கண்கள், தலை, கால்கள், இறக்கை உள்ளிட்டவற்றை கொண்டிருப்பதாக, இதுபற்றிய புகைப்படங்களை மேற்கோள் காட்டும் எமிரிடியஸ், இதன்மூலமாக செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பூச்சி போன்ற உயிரினம் பாறைகளில் குகை அமைத்து வாழ்வதாகக் கூறும் அவர், இவை பூமியில் உள்ள தேனீக்களைப் போன்றவை என சுட்டிக்காட்டுகிறார். தேனீக்கள் இருக்கும்பட்சத்தில் மனிதர்களைப் போலவே உயிரினங்களும் செவ்வாயில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் தீர்மானமாகக் கூறுகிறார்.  

தனது ஆராய்ச்சி முடிவுகளை கருத்தரங்கம் ஒன்றில் சமீபத்தில் ஆய்வுக் கட்டுரையாக அவர் சமர்ப்பித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.