140 பேருடன் ஆற்றுக்குள் பாய்ந்த போயிங் விமானம்! பிறகு நேர்ந்த அதிசயம்!

அமெரிக்காவில் விமானம் ஒன்று 140 பேருடன் ஆற்றுக்குள் பாய்ந்தது.


கியூபா நாட்டில் இருந்து 136 பயணிகள், விமானிகள் மற்றும் ஊழியர்கள் என 140 பேருடன் போயிங் நிறுவனத்தின் விமானம் ஒன்று அமெரிக்கா புறப்பட்டது. மியாமி நிறுவனத்திற்கு சொந்தமான, போயிங் 737 விமானம் அமெரிக்காவை அடைந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.

அமெரிக்காவின் புளோரிடாவில் அந்நாட்டு நேரப்படி, நேற்று இரவு ஜாக்சன்வில்லே விமான நிலையத்தில் போயிங் விமானம் தரை இறங்க முயன்றது. அங்கு மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை.

இருந்தாலும் கஷ்டப்பட்டு விமானி விமானத்தை ஓடுபாதையில் தரை இறக்கினார். அப்போது ஓடுபாதை மழை நீர் நிரம்பியிருந்த காரணத்தினால் விமானம் சறுக்கியுள்ளது. அத்துடன் அதே வேகத்தில் அருகே உள்ள செயிண்ட் ஜான்ஸ் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்தது.

ஆனால் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தினால் விமானம் மூழ்கவில்லை. இதனால் 140 பேரும் உயிர் தப்பினர்.