நீரில் மட்டும் அல்ல நிலத்திலும் வாழும் அதிசய மீன்! கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்..! ஆனால்..? அதிகாரிகள் எடுத்த பதற வைக்கும் முடிவு!

வாஷிங்டன்: நிலத்திலும் உயிர்வாழக்கூடிய மீன் இனம் ஒன்றை தேடிக் கொல்லும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆம், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள குவினெட் கவுன்டி குளத்தில் ஒரு வகை பாம்புத் தலை கொண்ட மீன் சில நாட்கள் முன்பாக பிடிபட்டது. இத்தகைய மீன் பிடிபடுவது இதுவே முதல்முறை என்பதால், அதனை இயற்கை உயிரின ஆர்வலர்கள் கவனமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, இது நீரில் மட்டுமின்றி, நிலத்திலும் உயிர் வாழக்கூடியவை என்றும், நீர்வாழ் மற்றும் நிலவாழ் உயிரினங்களை வேட்டையாடி, உயிர்ச்சங்கிலியில் தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் வல்லமை கொண்டவை என்றும் தெரியவந்தது.  

கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த மீன், அமெரிக்காவில் உள்ள மார்க்கெட் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் வளர்ப்பு மீனாக, கடந்த 2002ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் படிப்படியாக, இது ஜார்ஜியா முழுக்க உள்ள நீர்நிலைகளில் பரவியது எப்படி எனத் தெரியாமல் உயிரின ஆய்வாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

3 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீனை, உடனடியாக வேட்டையாடி அழிக்கும்படி, ஜார்ஜியா மாகாண இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.