பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாது..! கஞ்சா போதை தாயால் 4 குழந்தைகளுக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்! பதற வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் மூடநம்பிக்கை நிறைந்த தாய் ஒருவர் கஞ்சா போதையில் குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கால்சியா வில்லியம்ஸ் என்ற பெண் ஒருவர் கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவர் கஞ்சா போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. தன்னுடைய காரில் 7 வயது முதல் 13 வயது வரையிலான 4 குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

அப்போது காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு பாதுகாப்பாக வந்த குழந்தைகளை பார்த்து சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு ஜன்னலுக்கு வெளியே கைகளை நீட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதற்கு குழந்தைகள் மறுப்பு தெரிவிக்கவே, பேய்கள் நல்லவர்களை ஒன்றும் செய்யாது, கடவுள் காப்பாற்றுவார் என மூடநம்பிக்கையோடு பேசி உள்ளார்.

பின்னர் தன்னுடைய காரை வேகமாக ஓட்டி சாலையோர பனை மரத்தில் மோதியுள்ளார். இதில் 4 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.  இதுகுறித்து அந்த 36 வயது பெண்ணான கால்சியா வில்லியம்ஸிடம் விசாரித்தபோது காரை ஓட்டும்போது கஞ்சா உட்கொண்டதை ஒப்புக்கொண்ட அவர் தன்னுடைய கணவர்தான் சாத்தானை தன்மீது ஏவிவிட்டதாகவும் அதனால்தான் அப்படி பேசியதாகவும் நாடகம் ஆடினார்.

இதை ஏற்க மறுத்த காவல்துறை கால்சியாவை மீது பெற்ற குழந்தைகளைக் கொல்ல முயற்சித்ததாக கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காயமடைந்த 4 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நம்மூரில் கணவர் மீது கோபம் வந்தால் குழந்தைகள் விஷம் வைத்தோ, கிணற்றில் வீசியோ கொல்லப்படுகிறார்கள். தொழில்நுட்பம் நிறைந்த அமெரிக்காவில் விபத்து மூலம் கொல்ல பார்க்கிறார்கள்.