விசாரணை அறையில் பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்! வீடியோவில் சிக்கிய போலீசின் வெறிச் செயல்!

அமெரிக்காவில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணை போலீசார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.


வெர்மாண்ட் மாநிலத்தில் பார் ஒன்றில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்ட ஆனி கான்ல்லி என்ற பெண் காவல் நிலையத்தில் இருந்த மிகச் சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்தார். போலீசார் விசாரணையைத் தொடங்கும் முன்பு தனக்கு இப்படி ஒரு கொடூரமான அனுபவம் நேரும் என அந்தப் பெண் எதிர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரைச் சித்திரவதை செய்த காவல் அதிகாரியும் தான்  வீடியோவில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாக கூடும் என எதிர்பார்த்திருக்கவில்லை

வழக்கமான போலீசாரின் ஆணவத்துடன் அந்த காவல் அதிகாரி விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணை கொடூரமாக  தாக்கினார். அந்தப் பெண்ணை சிறிதும் இரக்கமின்றி சுவற்றுடன் மோதித்தள்ளிய அவர் பெண்ணின் முகத்தில் சரமாரியாக குத்திய காட்சிகள் அங்கு இருந்த ஒரு காவலரின் உடை கேமராவில் பதிவாகி உள்ளது

மேலும் காவலர்கள் ஆணியை கீழே தள்ளி ஏறி அமர்ந்து சரமாரியாக தாக்கி அது தொடர்பான காட்சிகளும் இதில் பதிவாகியுள்ளன இந்தக் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதையடுத்து தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது