நள்ளிரவு! குழந்தைகள் காப்பகம்! பற்றி எரிந்த தீ! துடிதுடித்த குழந்தைகள்! அத்தனையும் பேரையும் காப்பாற்றிய 2 சிறுவர்கள்!

அமெரிக்காவில் குழந்தைகள் காப்பகத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா பகுதியில் ஒரு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1மணியளவில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ பிடித்துள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு நேரம் என்பதால் குழந்தைகள் அனைவரும் தூக்கத்திலிருந்துள்ளனர். இதையடுத்து தீப்பற்றி எரிந்தால் 12 வயது சிறுவர்கள் இருவர் அங்குள்ளவர்களை எழுப்ப முயன்றுள்ளனர்.அவர்களால் முடிந்தவரை அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றியுள்ளனர்.

இதையடுத்து உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தனர். காப்பகத்தின் முதல் தளத்திற்கு செல்ல முயற்சிக்கையில் அங்கு கரும்புகை சூழ்ந்ததால் யாரும் அப்பகுதிக்குச் செல்ல முடியவில்லை. 

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் அவர்கள் அனைவருமே சுமார் 8 மாதம் முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் என தெரியவந்தது. மற்றும் காயமடைந்த மற்ற குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட மின்சார கசிவு காரணமாக இருக்குமோ? அல்லது சமையலறையில் சரியாக அடுப்பைப் அணைக்காமல் விட்டது இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்குமோ? என போலீசார் இரு தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.