இடுப்பு பேக்கிற்குள் பிறந்து 6 நாளே ஆன குழந்தை! சோதனையில் அம்பலமான பெண்ணின் பகீர் செயல்!

அமேரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் டல்போட் (jennifer Talbot)43. இவர் பலிப்பைனில் வசித்து வருகிறார். இவர் அங்கிருந்து அமேரிக்காவின்வின் டெல்டா விமான நிலையத்திற்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.


வழக்கம்போல் விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்துகொன்டிருந்தனர்.அப்போது அவர் மட்டும் சோதனையில் இருந்து தப்பி செல்ல முயன்ற போது போலீஸ் அதிகாரிகள் அதை பார்த்துள்ளனர். 

அப்போது அந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சோதனை ஆய்வாளர்களிடம் சொல்ல வேண்டுமா என்று கூறியுள்ளார்.மேலும் சந்தேகத்தில் அதிகாரிகள் அவர் இடுப்பில் அணிந்திருந்த சிறிய பையை சோதனை செய்தபோது அதில் 6நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை மறைத்து வைத்து கொண்டதை கண்டுள்ளனர். 

மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது குழந்தைக்கான சரியான ஆவனம் இல்லாததால் அவர்கள் அங்கிருக்கும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு தகவல் தெர்வித்துள்ளனர்.தற்போது அவர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் அந்த குழந்தைக்கு என்ன உறவு என்று விசாரித்தனர்.

அவர் எந்த பதிலும் கொடுக்காததால் அவர் குழந்தையை கடத்தி இருக்கலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் அங்கிருக்கும் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியள்ளது.அதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.இதை கண்டு அங்கிருந்த அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.